தோட்டக்கலைச் சங்கத்தில்
புகைப்படப் போட்டி
உலகின்
முன்னணி தோட்டக் கலைத்
தொண்டு அமைப்பாகச் செயல்பட்டு வரும் ராயல் தோட்டக்கலை சங்கம் (ராயல் ஹார்ட்டிகல்சுரல் சொசைட்டி) இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு, தோட்டங்களும் தாவரங்களும் இந்தப் பூமிக்கு
வளத்தையும், ஊக்கத்தையும் எப்படி
அளிக்கின்றன? என்பதைப் பதிவு
செய்யும் வகையில், கடந்த
சில ஆண்டுகளாகப் புகைப்படப் போட்டிகளையும் நடத்தி
வருகிறது. இந்த அமைப்பின்
2022-ஆம் ஆண்டிற்கான புகைப்படப் போட்டி அறிவிப்பு வெளியாகி
இருக்கிறது.
இந்தப்
புகைப்படப் போட்டி, தோட்டங்கள், வனவிலங்குகளுக்கு வரவேற்பு,
தாவரங்கள், பெரிது, படைப்புத்
திறன், உட்புறத் தோட்டக்கலை, 18 வயதுக்குக் குறைவானவர்கள் (11 முதல்
18 வயது), 11 வயதுக்கும் குறைவானவர்கள், சமூக ஊடகங்கள், போர்ட்ஃபோலியோ எனும்
பத்து வகைப்பாடுகளைக் கொண்டிருக்கிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்கு நுழைவுக் கட்டணம் எதுவுமில்லை.
முதல்
எட்டு வகைப்பாடுகளுக்கான போட்டியில் பங்கேற்பவர்கள் கீழ்க்காணும் விதிமுறைகளைத் தெரிந்து
கொள்ளலாம்.
- இப்போட்டிக்கான வலை
தளத்தில் மட்டுமே படங்களைச்
சமர்ப்பிக்க வேண்டும். - ஒரு படத்தினை
மட்டும் போட்டிக்குச் சமர்ப்பிக்கக் கூடாது. ஐந்து படங்களைச்
சமர்ப்பிக்க வேண்டும். - சமர்ப்பிக்கப்படும் படங்கள்
டிஜிட்டல்
வடிவில்
இருக்க வேண்டும். - சமர்ப்பிக்கப்படும் கோப்பின்
அளவு 4 எம்.பி
அளவுக்கு அதிகமின்றி இருக்க
வேண்டும். - 2021ஆம் ஆண்டு
ஏப்ரல் முதல் நாளிலிருந்து 2022 –ஆம் ஆண்டு
பிப்ரவரி 1 ஆம் நாள்
வரை சமர்ப்பிக்கலாம். - படத்தில் வாட்டர்
மார்க்ஸ், பார்டர்ஸ், கையொப்பங்கள் போன்றவை
இருக்கக் கூடாது. - கருப்பு – வெள்ளைப்
படமும் பங்கேற்க அனுமதிக்கப்படும். - ஒன்பது மற்றும்
பத்தாவது வகைப்பாடுகளுக்கு போட்டிக்கான வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளைப் பின்பற்றலாம். ஒவ்வொரு வகைப்பாடுகளுக்கும் எவ்வாறான
படங்களைச் சமர்ப்பிக்கலாம்? என்பது
குறித்தும் இந்த வலை
தளத்தில் தனித்தனியாக விளக்க
மளிக்கப்பட்டிருக்கிறது.
போட்டியில் பங்கேற்ற படங்களிலிருந்து, இப்போட்டிக்காக அமைக்கப்பெற்ற நடுவர்
குழு பரிசுக்குரிய படங்களைத்
தேர்வு செய்யும். தேர்வு
செய்யப்பட்ட
படங்கள் அனைத்தும் இந்த
அமைப்பின் வழியாகப் பொதுமக்கள் பார்வைக்காகக் காட்சிக்கு வைக்கப்படும்.
இப்போட்டியில் முதல் பரிசு பெறும்
படத்திற்கு இங்கிலாந்தின் பணமதிப்பில் 5000 பவுண்டுகள் பரிசாக வழங்கப்படும். இது
தவிர பல்வேறு பிரிவுகளுக்கான பரிசுகளும் உண்டு.
இப்போட்டிக்கான வலைதளத்தில் 2018 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு
வரை நடத்தப்பெற்ற போட்டிகளில் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
கூடுதல்
தகவல்களைத் தெரிந்து கொள்ள: Click Here