தொல்லியல் படிப்பு
16ம் தேதி கடைசி
நாள்
தமிழக
தொல்லியல் துறை சார்பில்
நடத்தப்படும், தொல்லியல்
முதுநிலை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க, நாளை
மறுதினம் கடைசி நாள்.தொல்லியல்
துறை சார்பில், இரண்டாண்டு கால முழுநேர தொல்லியல்
முதுகலை பட்டயப் படிப்பு
கற்பிக்கப்படுகிறது. இதற்கான
விண்ணப்பங்கள் தற்போது
வினியோகிக்கப்படுகின்றன.
இந்த
படிப்பில் சேர, முதுகலை,
முதுநிலை அறிவியல், முதுநிலை
பொறியியல் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில், 55 சதவீத
மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
தகுதியான மாணவர்களுக்கு 25ம்
தேதி எழுத்து தேர்வு
நடத்தப்பட உள்ளது. அதைத்
தொடர்ந்து, நேர்முகத் தேர்வின்
வாயிலாக 20 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
அடுத்த
மாதம் வகுப்புகள் துவங்க
உள்ளன.இந்த படிப்புக்கான விண்ணப்பங்களை www.tnarch.gov.in என்ற
இணையதளத்தில் இருந்து
பெற்று, நாளை மறுதினத்திற்குள் பூர்த்தி செய்து,
ஆணையர், தொல்லியல் துறை,
தமிழ் வளர்ச்சி வளாகம்,
தமிழ்ச் சாலை, எழும்பூர்,
சென்னை, – 8 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.மேலும்
விபரங்களுக்கு tnarchioa2021batch@gmail.com என்ற
மின்னஞ்சல் அல்லது 044- – 2819 0020 என்ற
தொலைபேசி எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.