சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரப் படிப்புக்கான தேர்வுகள் செப்.27-ல்
தொடக்கம்
சென்னைப்
பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்
கல்வி நிறுவனத்தில் இளங்கலை,
முதுகலை (எம்பிஏ உட்பட),
தொழிற்கல்வி, டிப்ளமோ, முதுகலை
டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் (யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்டவை) நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் படிப்புகளுக்கு 2021-ம் ஆண்டு
மே மாதம் தேர்வு
நடைபெற்றிருக்க வேண்டும்.
கரோனா காரணமாகத்
தள்ளிப்போயிருந்த இந்தப்
படிப்புகளுக்கான தேர்வுகள்
செப்டம்பர் 27-ம் தேதி
தொடங்கவுள்ளன. மேலும்
இதற்கான தேர்வுக்கால அட்டவணையும் www.ideunom.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஹால்
டிக்கெட்டை செப்டம்பர் 20-ம்
தேதி அன்று அதே
இணையதளத்தில் இருந்து
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.