தமிழக மின் வாரியத்தில் 50 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், 500 உதவி பொறியாளர்; 1,300 கணக்கீட்டாளர்; 500 இளநிலை உதவியாளர் கணக்கு; 2,900 களஉதவியாளர் பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய, முந்தைய ஆட்சியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுவரை மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளதால், ஏற்கனவே வெளியிடப்பட்ட வேலை வாய்ப்பு அறிவிப்பை ரத்து செய்துவிட்டு, புதிய அறிவிப்பு வெளியிட மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் மின் வாரிய வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய இருப்பதாக போலி விளம்பரங்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த போலி இணையதளங்களில் விண்ணப்பித்து, தேர்வு கட்டணம் செலுத்தி பலரும் ஏமாந்து வருகின்றனர். | இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வது தொடர்பாக, முன்னணி தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்படும். மின்வாரியத்தின், www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்படும்.
இதே இணையதளத்தில் விண்ணப்பிப்பது உள்ளிட்ட தேர்வு தொடர்பான விபரங்களும் இடம்பெறும். புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை, வேலைவாய்ப்பு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளி யாகவில்லை. எனவே, பட்டதாரி கள், மின் வாரியம் பெயரில் வரும் போலி வேலைவாய்ப்பு அறிவிப்பை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.