Monday, December 23, 2024
HomeBlogதமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண், பணி மூப்பு அடிப்படையிலேயே பதவி உயர்வு
- Advertisment -

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண், பணி மூப்பு அடிப்படையிலேயே பதவி உயர்வு

Promotion based on score, work seniority

மதிப்பெண், பணி
மூப்பு அடிப்படையிலேயே பதவி
உயர்வு

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு, மதிப்பெண்
மற்றும் பணி மூப்பு
அடிப்படையிலேயே பதவி
உயர்வு வழங்கப்பட வேண்டும்
என்று உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

மதிப்பெண்
மற்றும் பணி மூப்பு
அடிப்படையில் பதவி
உயர்வு வழங்கப்படவில்லை என்று
கூறி, தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையச் செயலாளர்
உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிரான
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்
உச்ச நீதிமன்றம் இந்த
உத்தரவை பிறப்பித்துள்ளது.

மதிப்பெண்
மற்றும் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க
உத்தரவிட்டும், நீதிமன்ற
உத்தரவை தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையம் பின்பற்றவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

குறைந்த
மதிப்பெண் பெற்றவர்களுக்கு பதவி
உயர்வு வழங்கப்படுவதை ஏற்க
முடியாது என்றும் உச்ச
நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்த
புதிய உத்தரவை 12 வாரங்களில் TNPSC நடைமுறைப்படுத்தவும், உச்ச
நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -