அரசு கல்லூரிகளில் தற்காலிக பேராசிரியர்களை நியமிக்க
அரசு அனுமதி
தமிழகத்தில் அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லூரிகளில் சுழற்சி-2
பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு வசதியாக 1661 கவுரவ பேராசிரியர்களை நியமித்து கொள்ளலாம் என
அரசு அனுமதித்துள்ளது.
தொகுப்பூதிய அடிப்படையில் அந்த
பேராசிரியர்களுக்கு மாதம்
ரு.20 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக
அரசு ரூ.36 கோடியே
54 லட்சம் நிதி ஒதுக்கி
உள்ளது. 59 கல்லூரிகளில் உள்ள
இந்த காலி பணியிடங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்துள்ள கல்வித்தகுதி பெற்ற
கவுரவ பேராசிரியர்கள் தான்
நியமிக்கப்பட வேண்டும்
என்றும் அரசு ஆணையிட்டுள்ளது.