இல்லம் தேடி
கல்வி திட்டம் – தன்னார்வலர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை
திருச்சி,
தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ள ‘இல்லம் தேடி கல்வி‘ திட்டத்தில் ஒவ்வொரு தன்னார்வலர்களுக்கும் மாதம்
ரூபாய் 1000 ஊக்கத் தொகை
வழங்க ஆலோசித்து வருவதாக
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறி உள்ளார்.
சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் பள்ளிக்
கல்வித் துறையின் சார்பில்
நடைபெற்ற ‘இல்லம் தேடி கல்வி‘ பயிற்சிப்
பணிமனை, விழிப்புணர்வு கலைப்
பயணம் மற்றும் தன்னார்வலர்களுக்கான, இணையதளம் தொடக்க
விழாவினை பள்ளிக்கல்வித் துறை
அமைச்சர் கலந்து கொண்டு
தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்:
இல்லம்
தேடி கல்வித் திட்டத்தில் ஆர்வமுள்ள தன்னார்வலர்களுக்கு ரூ.1,000 ஊக்கத் தொகை
வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.