பல்வேறு துறை வேலைவாய்ப்புகளுக்கு, ஹிந்தியின் தேவை அதிகரித்து உள்ளதால், இளைஞர்களின், வேலைவாய்ப்புக்கு பயன்படும் வகையில், ஹிந்தி பிரசார சபா சார்பில், ஆன்லைன் வழியில் ஹிந்தி படிப்புகள் துவங்கப்பட்டுள்ளன.
சென்னை ஹிந்தி பிரசார சபாவின் பொது செயலர் ஜி.செல்வராஜன் கூறியதாவது: ஹிந்தி பிரசார சபா சார்பில், தினமும் இரண்டு பிரிவுகளாக ஆன்லைனில் பேச்சுப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதில் மாணவர்கள், இல்லத்தரசிகள், பணியில் உள்ளவர்கள் என, அனைவரும் சேர்ந்து படிக்கலாம்.ஆன்லைன் வழி பாடங்களை படித்த பின், அவர்களுக்கு சந்தேகம் தீர்க்கவும் ஆசிரியர்களை நியமித்துள்ளோம். சான்றிதழும் வழங்கப்படும்.
அதேபோல், பிராத்மிக் முதல் பிரவீன்சான்றிதழ் படிப்பு வரை, ஆசிரியர்களிடம் படிக்க வாய்ப்பில்லாதவர்கள், தாங்களே சொந்தமாக புத்தகம் வாங்கி படிக்கலாம். அவர்கள் தனி தேர்வர்களாக ஆன்லைன் வழியே விண்ணப்பித்து தேர்வு எழுதலாம். இதற்கு யாருடைய பரிந்துரையும் தேவை இல்லை.
இதற்காக, தென்னிந்திய ஹிந்தி பிரசார சபாவின், www.dbhpscentral.org/latindex.php என்ற இணையதளத்தில், விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
தனி தேர்வர்களாக படிப்பவர்களுக்கு, புத்தகங்கள் பதிவு தபால் வழியில் அனுப்பப்படும். இதற்கு இணையத்தின் வழியே, தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தாங்கள் விரும்பும் ஊர்களில் தேர்வு மையம் ஒதுக்கவும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.விரைவில் பட்டமளிப்பு விழாபிரவீன் என்ற சான்றிதழ் படிப்பு வரை தேர்ச்சி பெறுவோருக்கு, ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழா நடத்தப்படும்.