TNPSC – நிலவியலாளர்,
சார்நிலை தேர்வுக்கான வழிமுறைகள்
தேர்வர்கள் விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும், விடைகளைக்
குறிக்கவும் கருப்பு நிற
பந்து முனைப் பேனா
மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
காலையில் நடைபெறும் தேர்விற்கு 9.15 மணிக்கு பின்னர்
தேர்வுக் கூடத்திற்குள் நுழையவோ,
மதியம் 1.15 மணிக்கு முன்பு
தேர்வு கூடத்திலிருந்து வெளியேறவும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று
கூறப்பட்டுள்ளது.
மேலும்,
மதியம் நடைபெறும் தேர்விற்கு தேர்வர்கள், மதியம் 2.15 மணிக்கு
பின்னர் தேர்வுக் கூடத்திற்குள் நுழையவோ, மாலை 5.15 மணிக்கு
முன்னர் தேர்வுக் கூடத்திலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.
விண்ணப்பதாரர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வுக் கூடம் அமைந்துள்ள இடத்தை எளிதில் தெரிந்துகொள்ள, நுழைவுச்சீட்டில் QR Code அச்சிடப்பட்டுள்ளது. இதனை
QR Code செயலி மூலம்
ஸ்கேன் செய்து தேர்வு
மையம் அமைந்துள்ள இடத்தை
எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு அறைக்குள் செல்போன்
மற்றும் வேறு ஏதேனும்
மின்னணு உபகரணங்கள் கொண்டு
செல்ல அனுமதி இல்லை.
விண்ணப்பதாரர்கள் தங்களது
செல்போன் மற்றும் பிற
உடைமைகளை தேர்வு மையத்தில்
உள்ள பாதுகாப்பு அறையில்
ஒப்படைக்க வேண்டும். பாதுகாப்பு அறையில் வைப்பதும் அவர்களின்
சொந்த பொறுப்பாகும்.