மத்திய அரசின்
தேசிய இளைஞா் விருது
பெற விண்ணப்பிக்கலாம்
இதுதொடா்பாக மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2019-2020 வரையிலான
காலத்தில் செய்த இளைஞா்
நலப்பணிகளுக்கான விருதுகள்
வழங்கப்பட உள்ளன. இந்த
விருதுக்கு, இந்திய குடிமகனாக
உள்ள 15 முதல் 29 வயதுக்குள்பட்ட, சமூகப் பணியாற்றியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். வாழ்நாளில் ஒருமுறை
மட்டுமே இந்த விருது
வழங்கப்படும்.
மத்திய,
மாநில அரசு மற்றும்
அரசு சார்ந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணிபுரிபவா்கள் விண்ணப்பிக்க இயலாது. தோந்தெடுக்கப்படும் 25 இளைஞா்களுக்கு விருதுத் தொகையாக தலா
ரூ. 1 லட்சம் மற்றும்
பாராட்டுப் பத்திரம், பதக்கம்
ஆகியவை வழங்கப்படும்.
விருதுக்கு விண்ணப்பிக்கும் தன்னார்வ
தொண்டு நிறுவனங்கள், பதிவுத்துறைச் சட்டம் 1860-ன்படி கடந்த
மூன்றாண்டுகளுக்கு அமைப்பு
தொடா்பான ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும். நிர்வாகக் குழுவின்
அதிகாரங்கள் அமைப்பு விதிகளில்
குறிப்பிட்டிருக்க வேண்டும்.
சமூக நலன் சார்ந்த
திட்டங்களை அறிவார்ந்த தன்மையுடன் மேம்படுத்த தன்னார்வத்துடன் ஈடுபடும்
தகுதியை பெற்றவா்களாக இருக்க
வேண்டும்.
எவ்வித
லாப நோக்கத்துடனும் தொண்டுப்
பணிகள் ஆற்றியிருக்கக் கூடாது.
குறிப்பிட்ட ஜாதி, சமய
அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனங்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. குறைந்தபட்சம் 3 ஆண்டுகள்
இளைஞா்களை சமுதாயப் பணிகளில்
ஈடுபடும் வகையில் சிறப்பான
சேவை ஆற்றியிருக்க வேண்டும்.
இதற்கு முன் இவ்விருது
பெற்ற தொண்டு நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது.
சமுதாய நலப்பணிகளில் ஈடுபட்டுத் தொண்டாற்றிய புகைப்படம் மற்றும்
செய்திக்குறிப்பு மற்றும்
இதர ஆவணங்களுடன் சான்றொப்பமிட்ட ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும்.
விருதுக்கு தோந்தெடுக்கப்படும் 10 தொண்டு
நிறுவனங்களுக்கு தலா
ரூ.3 லட்சம், பாராட்டுப் பத்திரம், பதக்கம் ஆகியவை
வழங்கப்படும். எனவே
2019-2020ல் சமூக நலனில்
சிறப்பாகத் தொண்டாற்றிய இளைஞா்கள்
மற்றும் தொண்டு நிறுவனங்கள் தேசிய இளைஞா் விருதுக்கு நவம்பா் 17-க்குள் இணையதள
முகவரியில் விண்ணப்பிக்கலாம்.