இந்திய அஞ்சல் துறை மூலமாக தமிழக வட்டத்தில் காலியாக உள்ள Postman/ Mail Guard பணிக்கு முன்னதாக பணியிட அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன் அறிவிப்பில் குறிப்பிட்டபடி, பதிவு செய்தவர்களுக்கு 14.11.2021 அன்று தேர்வு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த தேர்வுகள் தற்போது ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.