ஆசிரியர் தேர்வு மற்றும் இரண்டாம் நிலை காவலர் தேர்வு ஆகிய இரு தேர்வுகளுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இலவச பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளதாக, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், காலிப் பணியிடங்கள் அறிவிக்க உள்ளன.இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, 6,556 காலிப் பணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கு, 3,587 பணியிடங்களுக்கும் தேர்வு நடத்தப்பட உள்ளது.
TNUSRB புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு: 3,359 காலிப்பணியிடங்கள்!
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்கள், இத்தேர்வை எழுத இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள், காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர், தங்களது புகைப்படம், ஆதார் அட்டை விபரங்களுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இப்பயிற்சி வகுப்புகள், வரும் 21ல் துவக்க உள்ளது. இதேபோல், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால், இரண்டாம் நிலை காவலர் பணிக்கு, 3,559 பணியிடங்களுக்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு, வரும் 18 முதல், செப்., 17 வரை விண்ணப்பிக்கலாம்.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், இலவச பயிற்சி வகுப்புகள், காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வரும் 31ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர், வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.