பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம் என்றால், ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டம் (Post Office Ponmagan Scheme) நல்ல அற்புதமான பலன்களை தருகிறது.
பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம் 2015 இல் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டமாகும். இத்திட்டம் ஆண் குழந்தைக்காக மட்டுமே செயல்படுத்தப்பட்ட திட்டமாகும். தமிழ்நாட்டில் மட்டுமே உள்ள திட்டம் ஆகும்.
பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டத்தின் கீழ்க் கணக்கு தொடங்க வயது வரம்பு இல்லை. 10 வயதுக்குட்பட்ட மைனர் சிறுவனின் சார்பாக பெற்றோர் அல்லது guardian கணக்கைத் திறக்கலாம். குறைந்தபட்சம் ரூ.100 பணம் செலுத்தி கணக்கைத் துவங்கலாம். கணக்கு துவங்கியதில் இருந்து 15 வருடங்கள் கண்டிப்பாக பணம் செலுத்த வேண்டும். குறைந்தபட்ச முதலீடாக ரூ.500 மற்றும் அதிகபட்ச முதலீடாக ரூ.1.5 லட்சம் வரை ஒரு நிதியாண்டில் சேமிக்க முடியும். பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் தற்போதைய வட்டி விகிதம் 7.6% ஆக உள்ளது.
இந்தத் திட்டத்தின் படி முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என்றாலும், அடுத்த 5 ஆண்டுகளை தொகுப்புகளாக அதிகரித்துக் கொள்ள முடியும். நீங்கள் சேமிக்கும் பணம் மேஜர் ஆனவுடன் உங்கள் ஆண் குழந்தைக்கு வழங்கப்படும்.
முதிர்வு காலத்துக்குப் பின்பும் கணக்கு முடிக்கும் வரை உங்களுக்கு பிபிஎஃப் வட்டியே வழங்கப்படும். கணக்குத் துவங்கி 5 வருடங்கள் முடிந்த நிலையில் மேற்படிப்புக்காகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்காகவோ, கணக்கை முடித்துக் கொள்ளவும் முடியும்,
திருமணம், உயர் கல்வி போன்ற விஷயங்களுக்கு பொன்மகன் சேமிப்பு திட்டம் மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும். அந்த நேரத்தில் நீங்கள் யாரிடமும் கையேந்தி நிற்கும் நிலை வராது.
பொன்மகன் பொதுவாய்ப்பு நிதி திட்ட கணக்கை எவ்வாறு திறப்பது என்பதற்கான படிகள் இங்கே:
1. தமிழ்நாட்டில் உள்ள ஒரு தபால் நிலையத்தை அணுகவும்.
2. திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
3. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோர்/பாதுகாவலரின் அடையாளச் சான்று போன்ற தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
4. ஆரம்ப வைப்புத்தொகை ரூ. 500
5. கணக்கு திறக்கப்பட்டு குழந்தைக்கு பாஸ்புக் வழங்கப்படும்.
என்ன வருமானம் கிடைக்கும்: இத்திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் வீதம்,வருடத்திற்கு 12,000 ரூபாய் முதலீடு செய்தால், வட்டி விகிதம் 7.6%. இந்த வட்டி விகிதத்தில் 15 ஆண்டுகள் முடிவில் பொன்மகன் திட்டத்தில் 1,80,000 ரூபாய் முதலீடு செய்தால் 3,47,441 ரூபாய் முதலீடு வட்டியாக கிடைக்கும். மொத்தத்தில் முதிர்வு தொகை 5,27,446 ரூபாய் கிடைக்கும்.
மாதம் 5 ஆயிரம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு முதலீடு 60000 ஆக இருக்கும். ஒட்டுமொத்தமாக நீங்கள் 9 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். முதிர்வு தொகையாக 27 லட்சத்து 34 ஆயிரத்து 888 ரூபாய் கிடைக்கும்.
10 ஆயிரம் ரூபாய் மாதம் முதலீடு செய்தால் 15 வருடங்களில் 18 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள், உங்களுக்கு முதிர்வு தொகையாக 54 லட்சத்து 69 ஆயிரத்து 773 ரூபாய் வரை கிடைக்கும். வட்டி விகிதம் உயர்ந்தால் இதை விட அதிகமாகவே பணம் கிடைக்கும்.