HomeBlogசிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
- Advertisment -

சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Call to apply for CSIR NET exam

சிஎஸ்ஐஆர் நெட்
தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அறிவியல்
பாடப்பிரிவுகளுக் கான
(
இயற்பியல், வேதியியல், தாவரவியல்,
விலங்கியல், கணிதம்போன்ற பாடங்கள்)
சிஎஸ்ஐஆர் நெட் தகுதித்தேர்வு ஜனவரி 29 மற்றும் பிப்ரவரி
5, 6
ஆகிய தேதிகளில் கணினி
வழியில் நடைபெற உள்ளது.

ஷிப்ட்-1
தேர்வு காலை 8 மணி
முதல் மதியம் 12 மணி
வரையும் ஷிப்ட்-2 தேர்வு
பிற்பகல் 3 மணி முதல்
மாலை 6 மணி வரையும்
நடைபெறும். தேர்வு கொள்குறிவகை (அப்ஜெக்டிவ்) தேர்வாக இருக்கும்.

இதற்கான
ஆன்லைன் பதிவு டிசம்பர் 3-ம் தேதி
தொடங்கியுள்ளது. அறிவியல்,
கணிதம் தொடர்புடைய பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றவர்களும் தற்போது இறுதி ஆண்டு
படித்துக் கொண்டிருப்பவர்களும் என்றஇணையதளத்தை பயன்படுத்திஜனவரி 2-ம்
தேதி வரை ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதிகள், வினாத்தாள் முறை, தேர்வுக்கட்டணம் உள்ளிட்டவிவரங்களை https://csirnet.nta.nic.in, www.nta.ac.in இணையதள முகவரிகளில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.        

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பு
உரிய கல்வித்தகுதி இருப்பதை
உறுதிசெய்துகொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப் படுகிறார்கள். வினாத்தாள் ஆங்கிலம் மற்றும்
இந்தியில் மட்டுமே இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -