Thursday, December 19, 2024
HomeBlogஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் குறித்த இணையவழி கருத்தரங்கப் பயிற்சி
- Advertisment -

ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் குறித்த இணையவழி கருத்தரங்கப் பயிற்சி

Online Seminar Training on Export and Import Procedures

ஏற்றுமதி, இறக்குமதி
வழிமுறைகள் குறித்த இணையவழி
கருத்தரங்கப் பயிற்சி

தமிழக
அரசின் தமிழ்நாடு தொழில்
முனைவோர் மேம்பாடு மற்றும்
புத்தாக்க நிறுவனம், சென்னை,
ஏற்றுமதிஇறக்குமதி வழிமுறைகளும் சட்டதிட்டங்களும் குறித்த
இணையவழி கருத்தரங்கம் பற்றிய
3
நாட்கள் (அரை நாள்)
பயிற்சியினை வரும் 15.12.2021 தேதி
முதல் 17.12.2021-ம்
தேதி வரை (மதியம்
2.30
மணி முதல் மாலை
5.30
மணி வரை) தமிழ்நாடு
தொழில் முனைவோர் மேம்பாடு
மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் (EDII) நடத்த உள்ளது.

உலக
மயமாக்கலின் விளைவாக, ஏற்றுமதி
வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை,
கொள்முதலுக்ககான வாய்ப்புகள், ஏற்றுமதிஇறக்குமதி சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்கள், வங்கி
நடைமுறைகள், அந்நிய செலாவணியின் மாற்று விகிதங்கள், காப்பீடு
குறித்த தகவல்கள், ஏற்றுமதிஇறக்குமதி
விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள்
போன்றவை பயிற்றுவிக்கப்படும்.

மேலும்,
இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள்
பற்றியும் அவற்றைப் பெறும்
முறைகளைப் பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள்
மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும். ஏற்றுமதி
இறக்குமதி சார்ந்த தொழில்
தொடங்க விரும்பும் அல்லது
தற்போது உற்பத்தி செய்யும்
பொருட்களை ஏற்றுமதி செய்ய
விரும்பும் 18 வயது நிரம்பிய
10-
ம் வகுப்பு தேர்ச்சி
பெற்ற அனைவரும் கருத்தரங்கில் இணையலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற விரும்புவோர் www.editn.in என்ற
இணைய முகவரி மூலம்
தெரிந்துகொள்ளலாம். மேலும்
விவரங்களுக்கு அலுவலக
வேலை நாட்களில் (திங்கள்
முதல் வெள்ளி வரை)
காலை 10 மணி முதல்
மாலை 5.45 மணி வரை
தொடர்புகொள்ள வேண்டிய
முகவரி மற்றும் தொலைபேசி
/
கைப்பேசி எண்கள், முன்பதிவு
அவசியம்.

தமிழ்நாடு
தொழில் முனைவோர் மேம்பாடு
மற்றும் புத்தாக்க நிறுவனம்,
சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032.
8668102600, 9444557654 044-22252081/22252082

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -