ஐஏஎஸ், ஐபிஎஸ்
இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
ஐஏஎஸ்,
ஐபிஎஸ் அரசின் இலவசப்
பயிற்சிக்கு நாளை முதல்
விண்ணப்பிக்கலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
யூபிஎஸ்சி
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத்
தேர்வு, நேர்முகத் தேர்வு
என மூன்று கட்டங்களாக நடக்கும் ஆட்சிப்பணித் தேர்வின்
முதல் கட்டமான முதல்
நிலைத் தேர்வுக்கான பயிற்சிக்கான விண்ணப்பம் நாளை தொடங்க
உள்ளது. இதற்கான அறிவிப்பை
அரசு தேர்வாணையப் பயிற்சி
மையம் அறிவித்துள்ளது.
பயிற்சியில் சேர விருப்பம் உடையவர்கள் பயிற்சி மையத்தின் இணையதளமான
http://www.civilservicecoaching.com சென்று
விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பம் 11/12/2020 காலை
10 மணி முதல் தொடங்குகிறது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்
டிச.28 மாலை 6 மணியுடன்
முடிகிறது.