TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி –
ரஜினிகாந்த் அறக்கட்டளை அறிவிப்பு
நடிகர்
ரஜினிகாந்த் அறக்கட்டளை மூலமாக
ஏழை மாணவர்களுக்கு இலவச
டிஎன்பிஎஸ்சி பயிற்சி
அளிக்க இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
நடிகர்
ரஜினிகாந்த் அறக்கட்டளை மூலமாக
ஏழை மாணவர்களுக்கு இலவச
டிஎன்பிஎஸ்சி பயிற்சி
அளிக்க இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் திரைத்துறையில் அவரத சாதனையை பாராட்டி
மத்திய அரசு அவருக்கு
தாதா சாகேப் பால்கே
விருது வழங்கி கவுரவித்தது.
ரஜினிகாந்த் அறக்கட்டளை பயிற்சி இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும்
குரூப் நிலைத் தேர்வுகளுக்கு, ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு ரஜினிகாந்த் அறக்கட்டளை பயிற்சி
அளித்து தயார்படுத்தும் என
ரஜினி ரசிகர் மன்ற
ஒருங்கிணைப்பாளர் வி.எம்.சுதாகர்
கடந்த 14 ஆம் தேதி
தெரிவித்தார்.
இந்த
திட்டத்தை வழக்கறிஞர் எம்.சத்ய
குமார் நிர்வகிப்பார் என்றும்,
ரஜினிகாந்தின் 71-வது
பிறந்தநாளை முன்னிட்டு இந்த
அறிவிப்பை வெளியிட்டார். இந்த
நிலையில் தற்போது நடிகர்
ரஜினிகாந்த் அறக்கட்டளை மூலமாக
100 ஏழை மாணவர்களுக்கு இலவச
டிஎன்பிஎஸ்சி பயிற்சி
அளிக்கப்படும் என
அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்
தற்போது அதற்கான https://rajinikanthfoundation.org என்ற
இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.