Wednesday, January 15, 2025
HomeBlogஇலவச தையல் இயந்திரம் பெற தகுதியான விண்ணப்பம் வரவேற்பு - நாமக்கல்
- Advertisment -

இலவச தையல் இயந்திரம் பெற தகுதியான விண்ணப்பம் வரவேற்பு – நாமக்கல்

Eligible Application For Free Sewing Machine Welcome - Namakkal

இலவச தையல்
இயந்திரம் பெற தகுதியான
விண்ணப்பம் வரவேற்புநாமக்கல்

சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த மக்களின்
பொருளாதார நிலையில், திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்காகவும், அவர்களின் வாழ்க்கை தரத்தை
உயர்த்தவும், இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்களை வழங்க, தமிழக முதல்வர்
உத்தரவிட்டுள்ளார்.

அதின்படி,
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள
சிறுபான்மையினர் சமூகத்தை
சேர்ந்தவர்களான இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகள்
மற்றும் ஜெயின் இனத்தை
சேர்ந்த பயனாளி களுக்கு,
மின் மோட்டாருடன் கூடிய
இலவச தையல் இயந்திரம்
பெறுவதற்கு, தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

வயது
வரம்பு, 20 முதல், 45 வரை,
தையல் இயந்திரம் பயின்றவராக இருக்க வேண்டும். தையல்
கலை பயின்றதற்கான உரிய
சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆண்டு வருமான உச்ச
வரம்பு, ஒரு லட்சம்
ரூபாயாக இருக்க வேண்டும்.கைம்பெண்
மற்றும் கணவனால் கைவிடப்பட்டவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஒருமுறை
தையல் இயந்திரம் பெற்றிருந்தால், மீண்டும் ஏழு ஆண்டுகள்
கடந்த பின்னரே தகுதி
உடையவர். பயன்பெற விரும்பும் பயனாளிகள், நாமக்கல் மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல
அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -