TNPSC
– ஆராய்ச்சி உதவியாளா் பணியிடம்:
வரும் 22ல் எழுத்துத்
தேர்வு
ஆராய்ச்சி
உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு,
வரும் 22ல் நடைபெறும்
என்று அரசுப் பணியாளா்
தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து TNPSC புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழ்நாடு
பொது சார்நிலைப் பணிகளில்
அடங்கிய ஆராய்ச்சி உதவியாளா்
பதவிகளுக்கான எழுத்துத்
தேர்வு வரும் 22ம்
தேதி காலை மற்றும்
பிற்பகலில் நடைபெறுகிறது.
தேர்வு
எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களின் தேர்வுக்கூட நுழைவுச்
சீட்டுகள், தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரா்கள் தங்களுடைய ஒருமுறை
பதிவேற்றம் மூலமாக மட்டுமே
விண்ணப்ப எண் மற்றும்
பிறந்த தேதியை உள்ளீடு
செய்து தேர்வுக்கூட நுழைவுச்
சீட்டை பதிவிறக்கம் செய்ய
முடியும்.