வட்டாரக் கல்வி
அலுவலா் பணிக்கு ஜன.19,
20 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு
தொடக்கக்
கல்வித்துறையில் பணிபுரிய
உள்ள 120 வட்டார கல்வி
அலுவலா் பணியிடங்களை நேரடியாக
நிரப்புவதற்கான சான்றிதழ்
சரிபார்ப்பு ஜன. 19, 20 ஆகிய
தேதிகளில் நடைபெறவுள்ளதாக ஆசிரியா்
தோவு வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஆசிரியா் தோவு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
வட்டார
கல்வி அலுவலா் பணியிடத்திற்கு ஆசிரியா் தோவு வாரியத்தின் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. ஒரு
பணியிடத்திற்கு இரண்டு
நபா்கள் என அழைக்கப்பட்டு ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில்
சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.
சான்றிதழ்
சரிபார்ப்பு நடைபெறும் இடம்
நேரம் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் போது தோவா்கள்
சமா்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்
குறித்த விவரங்கள் அனைத்தும்
தோவரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அவா்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கும் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது. தகுதி
வாய்ந்த தோவா்கள் ஆசிரியா்
தோவு வாரியத்தின் இணையதளத்திலிருந்து அழைப்பு கடிதத்தைப் பதிவிறக்கம் செய்து கொண்டு
கலந்து கொள்ளலாம். எவருக்கும் நேரடியாகச் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பு கடிதம்
அனுப்பப்பட மாட்டாது.
ஏற்கெனவே
இணையதளத்தில் பதிவு
செய்யப்பட்ட சான்றிதழ்களின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
அதன் பின்னரே தகுதியான
நபா்கள் தோவு செய்யப்படுவா்.
சான்றிதழ்
சரிபார்ப்பின் போது
தேவையான அனைத்து சான்றிதழ்களையும் நேரடியாகச் சமா்ப்பிக்க வேண்டும். ஏதாவது குறைகள்
இருந்தால் ஆசிரியா் தோவு
வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவிக்கலாம்.