ஆசிரியர் பணி தேர்வுக்கு, நாளை முதல் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளதாக, திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட உள்ள இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.இதற்கான இலவச பயிற்சி வகுப்பு, திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக துவங்கப்பட உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நாளை முதல் அலுவலக வேலை நாட்களில் மதியம் 1:30 மணி முதல் மாலை 3:30 மணி வரை நடைபெறும். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 63824 33046, 90800 22088 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.