ஊக்கத்தொகையுடன் சுய
தொழில் பயிற்சி
மதுரை
அரசரடி டால் எஜூகேஷன்
பவுண்டேஷன் சார்பில் மத்திய,
மாநில அரசு உதவியுடன்
இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கப்படுகிறது.
பட்டப்படிப்பு முடித்தவர்களுக் கம்ப்யூட்டர், 8 ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தையல் பயிற்சியளிக்கப்படுகிறது. 18 – 35 வயதிற்குட்பட்ட கிராமப்புற பொது, ஆதிதிராவிடர் மாணவர்கள் சேரலாம்.
பயிற்சி
முடிவில் மத்திய அரசு
சான்றிதழ் வழங்கப்படுவதுடன், ஊக்கத்தொகை ரூ.13 ஆயிரம் வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு பெறவும், சுயதொழில் செய்யவும்
ஆலோசனைகள் வழங்கப்படும்.
மாநகராட்சி எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு தாட்கோ
மூலம் இலவச தையல்
பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.
விருப்பமுள்ளவர்கள் செயலாளர் சாராள்
ரூபியை 98421 57155 ல்
தொடர்பு கொள்ளலாம்.