HomeBlogபோட்டி தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு வெறும் ஒரு ரூபாய் கட்டணத்தில் பயிற்சி
- Advertisment -

போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு வெறும் ஒரு ரூபாய் கட்டணத்தில் பயிற்சி

Training for students for competitive exams at a fee of just one rupee

போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு வெறும்
ஒரு ரூபாய் கட்டணத்தில் பயிற்சி

மாணவர்களுக்கு வெறும் ஒரு ரூபாய்
கட்டணத்தில், போட்டி தேர்வுகளுக்கு காங்கிரசின் முன்னாள் அமைச்சர்
சந்தோஷ் லாட் பயிற்சியளிக்கிறார். இதற்காக தார்வாடின் ஸ்ரீநகரில், அதிநவீன வகுப்பறையை அமைத்துள்ளார்.

இது தொடர்பாக, சந்தோஷ் லாட் கூறியதாவது:

மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கு, வெறும்
ஒரு ரூபாய் கட்டணத்தில், ஆன்லைன் மூலம் பயிற்சி
அளிக்கப்படுகிறது. இது
மூன்று மாத பயிற்சி.
ஏற்கனவே 1.11 லட்சம் மாணவர்கள்,
பெயரை பதிவு செய்து,
கடந்த 2 முதல் பயிற்சி
பெறுகின்றனர். தார்வாடின் ஸ்ரீநகரில், அதிநவீன ஸ்டுடியோ
அமைக்கப்பட்டுள்ளது.

10க்கும்
மேற்பட்ட வல்லுனர்கள், பாடங்களை
துவங்கியுள்ளனர்.தினமும்
காலை 8.00 மணி முதல்,
11.00
மணி வரை; மாலை
6.00
மணி முதல், இரவு
8.00
மணி வரை 14 பாடங்கள்
தொடர்பாக பயிற்சி நடக்கிறது.ஆன்லைன்
பயிற்சிக்காகவே, ஒரு
மொபைல் செயலி தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில்,
மாணவர்கள் பதிவு செய்து
கொள்ளலாம்.போட்டி தேர்வுகளுக்கு, பயிற்சி பெற நிதியுதவி
கோரி, சில ஏழை
மாணவர்கள் என்னிடம் வந்தனர்.
500
மாணவர்களுக்கு, நேரடியாக
பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டது.

ஆனால்
ஊரடங்கால் ஆன்லைன் மூலம்
லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்சியளிக்க ஏற்பாடு
செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -