கால்நடை மருத்துவப் படிப்புகள் – அரசுப் பள்ளி
மாணவா்களுக்கான தரவரிசை
வெளியீடு
கால்நடை
இளநிலை மருத்துவப் படிப்பில்
அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இடஒதுக்கீட்டு இடங்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2,719 மாணவா்கள்
அதில் இடம்பெற்றுள்ளனா்.
தமிழ்நாடு
கால்நடை மருத்துவ அறிவியல்
பல்கலைக்கழகத்தின் கீழ்
சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல்,
உடுமலைப்பேட்டை, தேனி
வீரபாண்டி ஆகிய 7 இடங்களில்
கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட
கால்நடை மருத்துவம், பராமரிப்புப் படிப்புக்கு (பி.வி.எஸ்சி.
– ஏ.ஹெச்) 480 இடங்கள்
உள்ளன. இதில், அகில
இந்திய ஒதுக்கீட்டுக்கு 72 இடங்கள்
(15 சதவீதம்) போக, மீதமுள்ள
408 இடங்கள் மாநில அரசுக்கு
உள்ளன.
திருவள்ளூா் மாவட்டம், கோடுவளியில் உள்ள
உணவு மற்றும் பால்வளத்
தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கு (பி.டெக்)
40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கு (பி.டெக்)
20 இடங்கள் இருக்கின்றன. இதில்,
உணவுத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கான 40 இடங்களில் மட்டும்
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 6 இடங்கள் (15 சதவீதம்) போக,
மீதமுள்ள 34 இடங்கள் மாநில
அரசுக்கு உள்ளன.
இதேபோல,
ஓசூா் மத்திகிரியில் உள்ள
கோழியின உற்பத்தி மற்றும்
மேலாண்மைக் கல்லூரியில் கோழியின
தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கு (பி.டெக்)
40 இடங்கள் உள்ளன. இந்த
3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள்
கொண்டது. பி.வி.எஸ்சி.
– ஏ.ஹெச் மற்றும்
பி.டெக் படிப்புகளுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோக்கை நடைபெறுகிறது. இதற்கான பொதுப் பிரிவு
தரவரிசைப் பட்டியல் அண்மையில்
வெளியிடப்பட்டது.
இந்த
நிலையில், அரசுப் பள்ளி
மாணவா்களுக்கான 7.5 சதவீத
உள்ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில்
திருப்பூா், ஊத்துக்குளியைச் சோந்த
பிரியா என்ற மாணவி
முதலிடமும், தருமபுரி திருமால்வாடியைச் சோந்த பவித்ரா
இரண்டாம் இடமும், நாமக்கல்
வெண்ணந்துாரைச் சோந்த
தீபாகுமாா் மூன்றாம் இடத்தையும் பிடித்தனா்.
தரவரிசைப்
பட்டியலில் மொத்தம் 2,719 மாணவா்கள்
இடம் பெற்றுள்ளனா். அவா்களில்,
31 பேருக்கு இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும்
இணையதளங்களைத் தொடா்பு
கொள்ளலாம்.