திருக்குறள் பயிற்சி
வகுப்பு துவக்கம்
கொரோனா
ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தியதை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் இலவச
திருக்குறள் பயிற்சி வகுப்பு
மீண்டும் துவக்கப்பட்டு உள்ளது.காஞ்சிபுரத்தில் செயல்படும் உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை சார்பில், பள்ளி,
கல்லுாரி மாணவ – மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி
வகுப்பு, காஞ்சிபுரம் கா.மு.சுப்பராய
முதலியார் மேல்நிலைப் பள்ளியில்
நடத்தப்பட்டு வந்தது.
கொரோனா
ஊரடங்கு காரணமாக திருக்குறள் பயிற்சி வகுப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது.தற்போது,
ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தியதை தொடர்ந்து, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் வளாகத்தில், திங்கள்
முதல் வெள்ளி வரை,
காலை 6.15 மணி முதல்,
7.15 மணி வரை இலவச
திருக்குறள் பயிற்சி வகுப்பு
நடத்தப்படுகிறது.
சனிக்கிழமை விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை காலை
10:30 மணி முதல், 12:30 மணி
வரை பயிற்சி வகுப்பு
நடைபெறும்.பயிற்சியில் பங்கேற்க
விரும்பும் ஆர்வமுள்ள பள்ளி,
கல்லுாரி மாணவ – மாணவியர்,
93643 23915, 98942 27612 ஆகிய மொபைல் போன்
எண்களில் தொடர்பு கொள்ளலாம்
என பேரவை தெரிவிக்கப்பட்டுள்ளது.