வேலைவாய்ப்பு பதிவை
புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் அவகாசம்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை
புதுப்பிக்க தவறியவர்களுக்கு மேலும்
காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு
செய்து, தங்கள் பதிவினை
2014, 2015 மற்றும் 2016 ஆகிய
ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறிய சுமார் 48 இலட்சம் பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு
புதுப்பித்தல் சலுகை
வழங்கப்படும் என
தெரிவித்திருந்தார்.
மேலும்
2017, 2018 மற்றும் 2019 ஆகிய
ஆண்டுகளில் தங்களது
வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை
புதுப்பிக்கத் தவறிய
பதிவுதாரர்களுக்கு, ஏற்கெனவே
3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆக்கால அவகாசத்தை நீட்டிக்க
வேண்டும் என்ற
கோரிக்கைகளை ஏற்று புதுப்பித்தல் சலுகை மேலும் நீட்டித்து வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர், மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி
வழிகாட்டு மையங்களில் பதிவு
செய்துள்ள பதிவுதாரர்கள் மூன்றாண்டுகளுக்கு, ஒருமுறை தங்களது
பதிவினை புதுப்பிக்க வேண்டும் எனவும், 2014, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை
புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு ஏற்கெனவே, புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டும் பதிவினை புதுப்பிக்காமல் அதிக அளவில் உள்ள
பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு
புதுப்பித்தல் சலுகை
வழங்குமாறும், 2017, 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை
புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு
புதுப்பித்தல் சலுகை
வழங்கப்பட்டு, இச்சலுகையில் புதுப்பிக்காத பதிவுதாரர்கள் தங்களின் பதிவு
மூப்பிணை மீளப் பெறும் பொருட்டு,
மேலும் ஒரு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.