இந்திய தேர்தல்
ஆணையம் சார்பில் இணைய
வழி மூலம் தேசிய
வாக்காளர் விழிப்புணர்வுப் போட்டிகள்
இந்திய
தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்படும் தேசிய
வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளுக்கான படைப்புகளை வரும் மார்ச் 15க்குள் அனுப்பலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது .
இதுதொடர்பாக கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
எனது
வாக்கு எனது எதிர்காலம் – ஒரு வாக்கின் வலிமை
என்ற கருப்பொருளை மய்யமாகக்
கொண்டு இணைய வழி
மூலம் தேசிய வாக்காளர்
விழிப்புணர்வுப் போட்டிகளை
இந்திய தேர்தல் ஆணையம்
அறிவித்துள்ளது. நாட்டின்
தேர்தல் செயல்பாடுகள் குறித்த
விழிப்புணர்வை அளவிடும்வகையில் விநாடி வினா போட்டிநடத்தப்பட உள்ளது.
காணொலிக்
காட்சி தயாரிக்கும் போட்டியில் நேர்மையாக வாக்களிப்பதன் முக்கியத்துவம், வாக்கின் வலிமை குறித்து
போட்டியாளர்கள் காணொலிக்
காட்சி ஒன்றைஉருவாக்க வேண்டும்.
அந்தக் காணொலிக் காட்சியானது ஒருநிமிட கால அளவில்
மட்டுமே இருக்க வேண்டும்.
இந்த போட்டிகளில் முதல்
மூன்று இடங்கள், சிறப்பிடம் பெறுவோருக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும்.
போட்டிகளில் பங்கேற்பவர்கள் போட்டிகளின் விரிவான வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் மற்றும்நிபந்தனைகளை https://voterawarenesscontest.in/ என்ற
இணையதளத்தில் தெரிந்து
கொள்ளலாம்.
போட்டி
தொடர்பான அனைத்து பதிவுகளையும், பங்கேற்பாளர் களின்
விவரங்களுடன் இணைத்து
வரும் மார்ச் 15 ஆம்
தேதிக்குள் voter-contest@eci.gov.in என்ற
மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்.
இந்த
போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அனைத்து
வயது
பொதுமக்கள், தொழில் முனைவோர்
பங்கேற்கலாம்.