சுயதொழில் தொடங்க
தாட்கோ திட்டம் மூலம்
மானியத்தில் கடனுதவி
சுயதொழில்
தொடங்க விரும்பும் SC,
ST பிரிவினருக்கு தாட்கோ
திட்டம் மூலம் மானியத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.
இதற்கு,
மருத்துவ மையம், மருந்தகம்,
கண் கண்ணாடியகம், முடநீக்கு
மையம், ரத்த பரிசோதனை
நிலையம் அமைத்தல், மேம்படுத்துதல் உள்ளிட்ட சுயதொழில் தொடங்க
விருப்பமுள்ள எஸ்சி,
எஸ்டி பிரிவினா் விண்ணப்பிக்கலாம். திட்டத் தொகையில்
30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் மானியமாக
வழங்கப்படும்.
மீதமுள்ளவை வங்கிக் கடன். எஸ்சி
பிரிவினா் http://application.tahdco.com/ என்ற
இணையதளத்திலும், எஸ்டி
பிரிவினா் http://fast.tahdco.com
என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
மேலும்
விவரங்களுக்கு, சென்னை
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள
மாவட்ட மேலாளா், தாட்கோ
அலுவலகத்தை நேரிலோ, 044 – 25246344,
94450 29456 ஆகிய எண்களையோ அணுகலாம்
என சென்னை மாவட்ட
ஆட்சியா் தெரிவித்துள்ளார்.