Thursday, December 19, 2024
HomeBlogஆன்லைனில் பணம் சம்பாதிக்க 5 வழிகள்
- Advertisment -

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 5 வழிகள்

5 Ways to Make Money Online

ஆன்லைனில் பணம்
சம்பாதிக்க 5 வழிகள்

முன்னணி
.டி. நிறுவன
ஊழியர்கள், தரவு உள்ளீடு
செய்பவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என
பல தரப்பட்ட தொழில்
நிபுணர்கள் வீட்டில் இருந்தவாறு வேலை செய்து வருவாய்
ஈட்டி வருகின்றனர்.

நேரடியாக
ஒரு நிறுவனத்தில் வேலை
சேராமல் ஃப்ரீலான்சராக செய்யும்
வேலைக்கு மட்டும் பணம்
பெறும் முறை முன்பே
இருந்து வந்தாலும் கொரோனா
காலகட்டத்தில் இது
மிகவும் வளர்ச்சி பெற்றுள்ளது.

ஃப்ரீலான்சராக பணிபுரிந்தபடியே மிக
ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.

ஆண்ட்ராய்ட் போன் இருந்தால் போதும் வீட்டிலையே சம்பாதிக்கலாம்!

நீங்கள்
இல்லதரசியாக இருக்கலாம், ஓய்வு
பெற்றவராகக் கூட இருக்கலாம், கல்லூரியில் படித்துவரும் மாணவர்களாகவும் இருக்கலாம் உங்களுக்காக காத்திருக்கிறது ஃப்ரீலான்சர் வாய்ப்புகள்.

இதுதவிர
மேலும் பல வழிகளில்
ஆன்லைனில் சம்பாதிக்க முடியும்.
அது எப்படி என்பது
குறித்தும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

ஃப்ரீலான்சராக உங்களுக்கு விருப்பமான துறையில்
நுழைந்து நீங்கள் சம்பாதிப்பது எப்படி என்பது குறித்து
பார்ப்போம் வாருங்கள்.

இதற்காக
சில வலைதளங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

அவற்றில் மிக முக்கியமான சில வலைதளங்கள் பின்வருமாறு:

Chegg India

Freelance India

Freelancer

Upwork

Fiverr

ஆண்ட்ராய்ட் போன் இருந்தால் போதும் வீட்டிலையே சம்பாதிக்கலாம்!

நீங்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறீர்கள் என்பதை எப்படி பதிவு செய்துகொள்வது?

STEP 1: உங்கள்
பெயர், மின்னஞ்சல், நாட்டின்
பெயர் மற்றும் பல
தகவல்களுடன் பதிவு செய்து
தளத்தில் சேரவும். உங்கள்
விவரங்கள் சரிபார்க்கப்பட்டதும், உங்கள்
கணக்கு உருவாக்கப்படும்.

STEP 2: உங்கள்
கல்வி, பணி அனுபவம்
மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள்
ஒரு சுயவிவரத்தை உருவாக்க
வேண்டும், மேலும் அது
ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே,
நீங்கள் ஃப்ரீலான்ஸ் வேலையை
ஏற்க அனுமதிக்கப்படுவீர்கள்.

STEP 3: வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்புகொள்வதன் மூலம் அல்லது தளத்திற்குச் செல்வதன் மூலம் நீங்கள்
வேலை அல்லது திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம். ஃப்ரீலான்ஸர்களுக்கு பணம் செலுத்தப்படுவதையும் உறுதி செய்கின்றன.

எத்தனை
மணி நேரம் வேலை
செய்கிறீர்கள் என்பதைப்
பொறுத்து உங்கள் ஊதியம்
கிடைக்கும். நேரடியாக உங்கள்
வங்கிக் கணக்குக்கு பணம்
செலுத்தப்படும். உங்களிடம்
வங்கிக் கணக்கு இல்லையென்றால் உங்கள் பெற்றோரின் வங்கிக்
கணக்கை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இன்ஸ்டாகிராம் மூலம் சம்பாதிக்கலாம்

அதற்கு
நீங்கள் ஏதாவது ஒரு
துறையை தேர்வு செய்து
அதுதொடர்பான ஏதாவது வீடியோக்களை தொடர்ந்து நீங்கள் பதிவு
செய்து வாருங்கள். உங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான பின்தொடர்பவர்கள் கிடைத்த பிறகு
விளம்பர நிறுவனங்களே உங்களை
அணுகி தங்களின் பொருட்களை
மார்கெட்டிங் செய்ய
கோரும்.

தங்கள்
பொருட்களை நீங்கள் விளம்பரப்படுத்தினால் விற்கும் என்பதால்
நீங்கள் கேட்கும் தொகையை
கொடுக்க நிறுவனங்கள் தயாராக
இருக்கும்.

இந்த
வகையில் நீங்கள் அதிக
வருவாயை வீட்டில் இருந்தபடியே ஈட்ட முடியும்.

சில
திரையுலகப் பிரபலங்கள் இந்த
வேலையை பகுதி நேரமாக
செய்து வருகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.

இதற்கு
நீங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை
உருவாக்கி நல்ல புகைப்படத்தை பதிவேற்றி வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் பிஸினஸ் கணக்கை
திறந்து கொள்ளுங்கள். பின்னர்
நீங்கள் தேர்வு செய்த
துறை குறித்து தொடர்ந்து
பதிவு செய்து வாருங்கள்.

எழுதியும்வீடியோ அப்லோடு செய்தும் சம்பாதிக்கலாம்

வலைதளம்
உருவாக்கி எழுதியும், யூடியூப்
தளத்தில் வீடியோ பதிவு
செய்தும் நீங்கள் சம்பாதிக்க முடியும். அது எப்படி
என்று பார்ப்போம் வாருங்கள்.

GMAIL
அக்கவுண்ட் வைத்திருந்தால் அதிலேயே
நீங்கள் பிளாக் (வலைப்பதிவு) ஒன்றை தொடங்கி எழுதத்
தொடங்கலாம்.

இது
முழுக்க முழுக்க இலவசம்
தான். அரசியல், சினிமா,
சமையல் என ஏதாவது
ஒரு துறையைத் தேர்வு
செய்து எழுதலாம்.

அதிக
எண்ணிக்கையிலான வாசகர்களை
நீங்கள் கிடைக்கப் பெறும்
போது அந்த வலைப்
பக்கத்தில் விளம்பரங்களைப் பெறுவீர்கள்.

இதன்மூலம்
உங்களுக்கு கூகுள் வருமானத்தை வழங்கும்.

வீடியோ
எடுப்பதில் ஆர்வம் என்றால்
யூடியூப் தளத்தில்
கணக்கைத் தொடங்கி வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்து
வாருங்கள். உங்கள் சேனலை
அதிக எண்ணிக்கையிலானோர் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும். அத்துடன்,
அதிகம் பேர் வீடியோவையும் பார்க்கவும் செய்ய வேண்டும்.
இதன்மூலம் உங்கள் வீடியோக்களுக்கு இடையில் விளம்பரங்கள் வரும்.
அந்த வகையிலும் நீங்கள்
சம்பாதிக்கலாம்.

அமேஸான் அசோசியேட்ஸ் ஆன்லைன்

ஒரு
பொருளைப் பற்றி வலைப்பதிவில் எழுதும்போது அல்லது யூடியூப்
தளத்தில் வீடியோ பதிவு
செய்து நீங்கள் விவரிக்கும்போதும் கீழே அந்தப்
பொருளை வாங்குவதற்கான அமேஸான்
லிங்க்கை பதிவு செய்ய
வேண்டும். அந்த லிங்க்கை
பயன்படுத்தி பொருள்களை யாராவது
வாங்கினால் உங்களுக்கு கமிஷன்
கிடைக்கும்.

https://affiliate-program.amazon.in/
என்ற இணையதளத்தில் நீங்கள்
முதலில் பதிவு செய்து
கொள்ள வேண்டும்.

STEP 1: https://affiliate-program.amazon.in/
சென்று லாகின் செய்ய
வேண்டும். பின்னர் உங்களைப்
பற்றிய தகவலை உள்ளிட
வேண்டும்.

STEP 2: உங்கள்
இணையதளங்கள் மற்றும் பயன்பாடுகளின் பட்டியலை அல்லது குறைந்தபட்சம் ஒன்றை நீங்கள் வழங்க
வேண்டும், அதில் நீங்கள்
பேனர்கள், விட்ஜெட்டுகள், இணைப்புகள் அல்லது பிற அமேசான்
விளம்பரங்களைக் காண்பிக்கும். நீங்கள் 50 தளங்கள் அல்லது
ஆப்ஸ் வரை சேர்க்கலாம்.

STEP 3: சுயவிவரப்
பிரிவில், உங்கள் தளங்கள்
மற்றும் பயன்பாடுகள், நீங்கள்
வைக்க விரும்பும் தயாரிப்புகள், நீங்கள் ட்ராஃபிக் செய்யும்
விதம், நீங்கள் வரையும்
விதம் பற்றிய தகவல்களை
வழங்கவும்.

உங்கள்
வலைதளங்கள் மற்றும் ஆப்களின்
பட்டியலை நீங்கள் வழங்க
வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஒன்றை வழங்க வேண்டும்.
அதில் நீங்கள் பேனர்கள்,
விட்ஜெட்டுகள், இணைப்புகள் அல்லது பிற அமேசான்
விளம்பரங்களைக் காண்பிப்பீர்கள். நீங்கள் 50 தளங்கள் அல்லது
ஆப்ஸ் வரை சேர்க்கலாம்.

STEP 4: நீங்கள்
இறுதியாக Amazon விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு வேலையைத் தொடங்குங்கள்.

விற்பனையாகும் பொருளில் இருந்து 10 சதவீதம்
வரை நீங்கள் சம்பாதிக்கலாம்.

ஆன்லைன் ஆய்வுகள்

ஆன்லைன்
ஆய்வு (சர்வே) பணிகளை
வழங்குவதில் Swagbucks மிகவும்
பிரபலமான தளங்களில் ஒன்றாகும்.
மேலும் கருத்துக்கணிப்புகளை நிரப்புதல், வீடியோக்களைப் பார்ப்பது
மற்றும் ஷாப்பிங் செய்தல்
போன்ற பல நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக ஸ்வாக்பக்ஸ் பணம் தருகிறது.

Toluna, Telly
Pulse, CashCrate, ValuedOpinions, OpinionBureau, Streetbees (app)
போன்றவை
கணக்கெடுப்புகளை வழங்கும்
பிற தளங்களில் சில
ஆகும்.

ஒவ்வொரு
தளமும் பொதுவாக ஒரு
நபர் ஒரு மாதத்தில்
முயற்சி செய்யக்கூடிய நிலையான
எண்ணிக்கையிலான கணக்கெடுப்புகளைக் கொண்டிருக்கும்.

எப்படி செய்வது?

STEP 1: அடிப்படை
தனிப்பட்ட தகவல்களை அளித்து
இணையதளத்தில் பதிவு
செய்யுங்கள், உங்களுக்காக ஒரு
கணக்கு உருவாக்கப்படும்.

உங்ககிட்ட கிரெடிட்
கார்டு இருக்கா? அவசர
தேவைக்கு இந்த 5 ‘தப்புகள்
பாவம் இல்லைங்க!

STEP 2: ஆய்வுகள்
பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு அனுப்பப்படும்.

STEP 3: உங்களால்
முடிந்த அளவு கணக்கெடுப்புகளை நிரப்பவும், புள்ளிகள் உங்கள்
கணக்கில் வரவு வைக்கப்படும். இவற்றை நீங்கள் விரும்பியபடி மீட்டுக்கொள்ளுங்கள்.

வாரம்
1,000
முதல் 2,000 வரை நீங்கள்
வருவாய் ஈட்ட முடியும்.
8
முதல் 10 தளங்கள் அல்லது
ஆப்களில் நீங்கள் பதிவு
செய்து கொண்டால் அதிக
வருமானத்தை ஈட்டலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -