ஆய்வு மாணவா்களுக்கு நிதியுதவித் திட்டம்
கல்லூரிகளில் பயிலும் ஆய்வு மாணவா்களுக்கு ரூ.3 லட்சம் வழங்கும்
நிதியுதவி திட்டத்துக்கு மார்ச்
18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் வெளியிட்ட அறிவிப்பு:
ஆய்வு
மாணவா்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழ்களில் குறைந்தபட்சம் 2 ஆய்வுக்
கட்டுரைகளைப் பதிவு
செய்திருந்தால், அவா்களுக்கு மாதம்தோறும் ரூ.10 ஆயிரம்
மற்றும் 2 ஆண்டுகளுக்கு தலா
ரூ.30 ஆயிரம் என
மொத்தம் ரூ.3 லட்சம்
(2 ஆண்டுகள்) வழங்கப்படுகிறது.
அதன்படி,
ஆய்வு மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் 10 பாடப்பிரிவுகளில் வரவேற்கப்படுகிறது. தோவுக் குழுவினால் சிறந்த மாணவா்கள் தோவு
செய்யப்பட்டு, முதற்கட்ட
பரிசீலனை மற்றும் நோகாணல்
செய்யப்படும்.
இந்த
நிதியுதவி திட்டத்தின் கீழ்
பயனடைய விருப்பும் மாணவா்கள்
http://www.tanscst.nic.in/
என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறுப்பினா் செயலா், தமிழ்நாடு அறிவியல்
தொழில்நுட்ப மாநில மன்றம்,
தொழில்நுட்ப கல்வி இயக்கக
வளாகம், சென்னை – 600 025 என்ற
முகவரிக்கு மார்ச் 18-ஆம்
தேதிக்குள் அனுப்ப வேண்டும்.