கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வரும், 29, 30 ஆகிய இரண்டு நாட்கள் மசாலா பொடிகள், ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில், மசாலா பொடிகள், தயார்நிலை பேஸ்ட், காளான் , வாழைப்பூ, பாகற்காய், கத்தரிக்காய், வெங்காயம் ஆகிய ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள், 1,770 ரூபாய் கட்டணமாக செலுத்தி, பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். வீடுகளில் இருந்தே தொழில் செய்ய ஆர்வமுள்ள இல்லத்தரசிகள், கூடுதல் வருமானம் எதிர்பார்க்கும் பெண்கள், இவ்வாய்பை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, வேளாண் பல்கலை அறுவடை பின்சார் தொழில்நுட்பத்துறையை நேரடியாகவோ, 0422-6611268 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.