பெண்கள் தையல் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
புள்ளம்பாடி அரசு தொழிற்பயிற்சி நிலையத் தினை தேசிய கல்விக் கொள்கையின் படி குறுகிய கால பயிற்சி அளிக்கும் பயிற்சி மையமாக மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி இங்கு தையல் இயந்திரம் இயக்குபவர் கையினால் எம்பிராய்டரி செய்பவர் ஆகிய தொழில் பிரிவுகளுக்கு குறுகிய கால பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சிக்கு 5ம்வகுப்பு தேர்ச்சி மற்றும் 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் சேரலாம். கல்லூரி முடித்த அல்லது இடைநின்ற மாணவிகளும் இப்பயிற்சியில் சேரலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால், வேலை இல்லாத பெண்களும் இதில் சேர்ந்து பயன் பெறலாம். இப்பயிற்சியில் சேர விரும்புவோர் புள்ளம்பாடி அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வரை தொலைபேசி யின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.