பசு நீரில்
இருந்து கிருமி நாசினி
தயாரிக்கலாம்
பசு
நீரில், கிருமி நாசினி
தயாரிப்பது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், தேவந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகோகுல கிருஷ்ணா
கோசாலா நிர்வாகி ஸ்ரீவித்யா கூறியதாவது:
எங்களுக்கு சொந்தமான நிலத்தில், கோ
சாலை அமைத்துள்ளோம். இதில்
இருக்கும் நாட்டு மாடுகளின்
சாணம் மற்றும் பசு
நீரை மதிப்பு கூட்டிய
பொருட்களாக தயாரித்து, விற்பனை
செய்து வருகிறேன்.கோமியம்
எனும் பசு நீரில்
வீட்டிற்கு தேவையான கிருமி
நாசினி திரவத்தை, தயாரித்து
விற்பனை செய்து வருகிறோம்.
இதன்
மூலமாக, எங்களுக்கு கணிசமான
வருவாய் கிடைக்கிறது.வீடுகளில்
மாடு வைத்திருப்போரும், முறையாக
பயிற்சி பெற்று, கோமியத்தில் மதிப்பு கூட்டியப் பொருட்களை
தயாரித்து, வருவாய் ஈட்டலாம்.
தொடர்புக்கு:
96559 93208