ஆசிரியர் தகுதி
தேர்வுக்கான முழு பாடத்திட்டங்கள் வெளியாகியுள்ளது
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி
தேர்வை தமிழ்நாடு ஆசிரியர்
தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அரசு
பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்ற விரும்பினால் இந்த
தேர்வில் கட்டாயம் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர்
தகுதி தேர்வு 2 தாள்களைக்
கொண்டது. அதாவது
முதல் எழுதுபவர்கள் 12ம் வகுப்பு
தேர்ச்சி மற்றும் D.T.Ed முடித்திருக்க வேண்டும்.
பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களும் இந்த தேர்வினை எழுதலாம்.
முதல்
தாள் தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் வெளியாகியுள்ளது. அதாவது,
மொழிப்பாடம்: (30 மதிப்பெண்கள்) சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு
மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்
குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்:
(30 மதிப்பெண்கள்) 6 முதல்
11 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி
உளவியல் கற்பித்தல் மற்றும்
கற்றல்
ஆங்கிலம்: (30 மதிப்பெண்கள்) மொழியின்
கூறுகள், தொடர்பு மற்றும்
புரிந்து கொள்ளும் திறன்கள்
கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி: (30 மதிப்பெண்கள்) கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்தப்
பாடங்களில் கற்பித்தல் புரிதல்
இரண்டாம் தாள்
தேர்வில் மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இருக்கும். இந்த
தேர்வு சுமார் 3 மணி
நேரம் நடைபெறும். இதில்,
மொழிப்பாடம்: (30 மதிப்பெண்கள்) சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு
மற்றும் புரிந்து கொள்ளும்
திறன்கள்
குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்:
(30 மதிப்பெண்கள்) 11 முதல்
14 வயது உட்பட்டவர் களுக்கான
கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல்
ஆங்கிலம்: (30 மதிப்பெண்கள்) மொழியின்
கூறுகள், தொடர்பு மற்றும்
புரிந்துகொள்ளும் திறன்கள்
சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு:
(60 மதிப்பெண்கள்) கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள்
மற்றும் இந்தப் பாடங்களில் கற்பித்தல் புரிதல்
இந்த
தகுதி தேர்வுக்கு https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/
என்ற இணையதளத்தின் மூலமாக
விண்ணப்பித்து கொள்ளலாம்.
இந்த
தேர்வில் விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினர் 500 ரூபாயும், SC, ST, SCA மற்றும்
மாற்றுத்திறனாளிகள் 250 ரூபாயும்
செலுத்தவேண்டும். இதற்கு
விண்ணப்பிக்க ஏப்ரல்
13ம் தேதி வரை
கடைசி நாளாகும்.