தென்னையை காக்க
வேளாண் துறை அறிவுரை
பொள்ளாச்சியில் கடந்த சில ஆண்டுகளாக
பருவமழைகள் நன்கு பெய்து,
பாசன ஆதாரங்கள் நிரம்பி
காணப்படுகின்றன. இதனால்,
மூன்றாண்டுகளுக்கு மேலாக,
விவசாயிகள் தென்னைக்கு தேவைக்கு
அதிகமாகவே பாசனம் வழங்கி
வருகின்றனர்.
இந்நிலையில், தற்போதைய கோடை வெயில்
வழக்கத்தை விட கடுமையாக
உள்ளதால், பாதிப்புகள் அதிகம்
ஏற்பட வாய்ப்புள்ளது.வெயிலின்
தாக்கத்தில் இருந்து தென்னையை
காக்கும் வழிமுறைகள் குறித்து,
வேளாண் உதவி இயக்குனர்
நாகபசுபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவர் கூறியதாவது:
தென்னை
பாத்திகளில் தேவைக்கு அதிகமாக
பாசனம் செய்து, தண்ணீரை
தேக்கி நிறுத்துவதால், மரத்தின்
வேர் ஆழமாகவும், பக்கவாட்டில் பரந்து விரிந்து படர்வதும்
தடுக்கப்படும்.
அளவுக்கு
அதிகமான பாசனத்துக்கு பழகிய
மரங்கள், கடும் கோடையில்
அதிக பாதிப்புக்குள்ளாகும். எனவே,
தேவையான பாசன வசதி
இருக்கும் போதும், விவசாயிகள் தென்னைகளை காய்ச்சலுக்கும், பாசனத்துக்கும் பழக்கப்படுத்த வேண்டும்.
சில தொழில்நுட்பங்களை பின்பற்றி,
கோடை கால பாதிப்பில் இருந்து காக்கலாம்.
அந்தந்த
மரத்தில் இருந்து விழும்
தென்னை ஓலைகளை கொண்டு,
பாத்தியை மூடிஇரண்டு அல்லது
மூன்று அடுக்காக பரப்ப
வேண்டும்.இதனால், பாசன
நீரின் ஈரப்பதம் நீண்ட
நேரம் காக்கப்படும்; களைகளும்
கட்டுப்படும்.
பழைய
ஓலைகள் மக்கிய பின்,
புதிய ஓலைகளை பரப்பி
விட வேண்டும்.
வட்டப்பாத்திகளில் உரிகாய் மட்டைகளின் நார்ப்பகுதி கீழ் இருக்குமாறும், மட்டைப் பகுதி மேல்
இருக்கு மாறும், வைக்க
வேண்டும். ஒரு பாத்திக்கு 100- – 250 மட்டைகள் தேவைப்படும்.ஒரு காய்ந்த மட்டை
அதன் எடையில் 3 – 5 சதவிகிதம்
நீர்ப்பிடிக்கும் திறனைக்
கொண்டுள்ளது. இந்த மட்டைகளின் கடினமான மேல் பகுதி
நீர் ஆவியாதலைக் கட்டுப்படுத்தும்.
ஒரு
பாத்திக்கு, 50 கிலோ என்ற
அளவில் தென்னை நார்க்கழிவை இட்டு மூடி விடலாம்.
மக்கிய தென்னை நார்க்கழிவு உரத்தை இடுவதால் மண்ணின்
பல்வேறு பவுதீக பண்புகளான
மண்ணின் கட்டமைப்பு, இலகு
தன்மை மற்றும் நீர்பிடிப்புத் திறன் ஆகியவை மேம்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வேளாண்
பணிகளிலிருந்து கிடைக்கும் புல் மற்றும் களைகள்,
கிளைரிசிடியா போன்ற
பசுந்தாள் பயிர்களையும் ஒரு
பாத்திக்கு, 25 கிலோ என்ற
அளவில் பரப்பி உயிர்
மூடாக்கு அமைத்து மண்ணின்
ஈரப்பதத்தைக் காக்கலாம்.
இதனால் மண்ணின் ஈரப்பதம்
காக்கப்படுவதோடு நல்ல
உரமாகவும் அமையும்.