தொழிற்சாலைக்கு
பசுமை
விருது
மே
1க்குள்
விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுச்சூழல்
பாதுகாப்பில்
சிறப்பாக
செயல்படும்
தொழிற்சாலைகள்
‘பசுமை
விருது‘
பெற
விண்ணப்பிக்கலாம்
என
தெரிவிக்கப்
பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் – செயலர் ஸ்மிதா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு
குழுமம்,
மாநிலத்தில்
சுற்றுச்சூழலை
பாதுகாப்பதிலும்,
அது
தொடர்
பான
பணிகளிலும்
குறிப்பிடத்தக்க
அளவு
பணியாற்றி
வருகிறது.மேலும் மாசை கட்டுப் படுத்துவதற்கு
நவீன
தொழில்
நுட்பத்தை
பயன்
படுத்தும்
தொழிற்சாலைக்கு
‘பசுமை
விருது‘
இந்தாண்டு
ஆக.
15ம்
தேதி
சுதந்திர
தின
விழாவில்
வழங்க
தீர்மானிக்கப்பட்
டுள்ளது.
சுற்றுச்சூழல்
பாதுகாப்பு
பணிகளில்
சிறப்பாக
செயல்படும்
தொழிற்சாலையை
தேர்வு
செய்ய
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.இதற்கான விண்ணப்பங்கள்
இத்துறையின்
அலுவலகத்திலும்
மற்றும்
காரைக்கால்
பிராந்திய
அலுவலகத்திலும்
நேரில்
பெற்றுக்கொள்ளலாம்.மேலும் இக்குழுமத் தின் https://dste.py.gov.in/# என்ற இணையதளத்திலிருந்தும்
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்
உறுப்பினர்
– செயலர்,
புதுச்சேரி
மாசு
கட்டுப்பாட்டு
குழு,
அண்ணா
நகர்,
புதுச்சேரி.
என்ற
முகவரிக்கு
வரும்
மே
1ம்
தேதி
மாலை
5.00 மணிக்கு
முன்னதாக
கிடைகுமாறு
அனுப்ப
வேண்டும்.