பண்பாட்டு பயிற்சி
வகுப்பு சிறார்கள் பங்கேற்கலாம்
சிறார்களுக்கான கோடை கால இலவச
பண்பாட்டு பயிற்சி வகுப்புகள், மடிப்பாக்கத்தில் நடத்ப்படுகின்றன. சென்னை, மடிப்பாக்கம், பாலையா
கார்டன், கந்தசுவாமி கோவிலில்,
சிறார்களுக்கான கோடைகால
இலவச பண்பாட்டு, 10 நாள்
பயிற்சி, விவேக சேவா
இன்டர்நேஷனல் சார்பில்
நடத்தப்படுகிறது.
இதில்
இறை பாடல், தேச
பக்திப் பாடல், நீதிக்கதை,
தியானம், பஜனை, யோகாசனம்
ஆகியவை இலவசமாக போதிக்கப்படுகின்றன.
தினசரி
மாலை 6:00 மணிக்கு நடக்கும்
இந்த பயிற்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்,
பரிசுகள் வழங்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள், 94864 30444 என்ற மொபைல்
எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.