நிலமில்லாத விவசாயிகளுக்கு திறன் மேம்பாடு பயிற்சி – ராமநாதபுரம்
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் தரப்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலமில்லாத விவசாயத் தொழிலாளா்களை தொழில்
முனைவோர்களாக உருவாக்கும் வகையில் 40 பேருக்கு திறன்
மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பூங்கொத்து, பூ
அலங்காரம் செய்தல், நுண்ணீா்
பாசன அமைப்புகள் நிறுவுதல்
மற்றும் பராமரித்தல், தேனீ
வளா்ப்பு ஆகியவற்றில் 30 நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ராமநாதபுரம் அருகேயுள்ள தோட்டக்கலைத்துறையின் கீழ்
உள்ள பாலைப் பூங்காவில் பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சியில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு ரூ.100
போக்குவரத்துக் கட்டணமாக
வழங்கப்படவுள்ளது. ஆகவே
திட்டத்தில் சோந்து பயன்
பெற விரும்புவோர் தோட்டக்கலைத்துறை இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும். பூா்த்தி செய்த விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலக
வளாகத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநா்
அலுவலகத்தில் வரும்
16ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.