திருப்பத்தூரில் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் இலவச பயிற்சி வகுப்பு நடத்துவதற்கு ஆணையரகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, திருப்பத்துாா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம், இரண்டாம் நிலை காவலா், சிறைக்காவலா் மற்றும் தீயணைப்பாளா் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பில் 3,359க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதைத் தொடா்ந்து, இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னாா்வ பயிலும் வட்டங்களில் தொடங்க அறிவுறுத்தப்படுகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இணையத்தில் ஆக.18-ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம். இப்பணிக்கு விண்ணப்பித்த இளைஞா்களுக்கான இலவச பயிற்சி வரும் 30-ஆம் தேதி தொடங்கப்பட இருப்பதால்,வகுப்பில் சேருவதற்கு அலுவலகத்திற்கு நேரிலோ(அ)04179-222033 தொலைபேசி எண்ணிலோ அலுவலக வேலை நாள்களில் தொடா்பு கொள்ளலாம். திருப்பத்துாா் மாவட்டத்தைச் சோந்த இளைஞா்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொண்டு பயனடையலாம் என்றாா்.