விவசாயிகளுக்கு மானிய
விலையில் வேர்க்கடலை
நகரி:விவசாயிகளுக்கு மானிய விலையில், வேர்க்கடலை வழங்கப்படுகிறது என,
வேளாண் துறை இணை
இயக்குனர் முரளிகிருஷ்ணா தெரிவித்தார்.
சித்துார்
மாவட்டத்தில், வேர்க்கடலை பயிரிடும் விவசாயிகளுக்கு, மாநில
அரசு சார்பில், 41 லட்சம்
கிலோ விதை வேர்க்கடலை மானிய விலையில் வழங்கப்பட
உள்ளது.இந்த வேர்க்கடலையை பெறுவதற்கு விவசாயிகள் தங்களது
ஆதார் கார்டு, நிலத்தின்
கணினி பட்டா, அடங்கல்
மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் அந்தந்த வேளாண் உதவி
இயக்குனர் அலுவலகம் மற்றும்
விவசாய கூட்டுறவு ஒழுங்கு
முறை விற்பனை கூடம்
ஆகியவற்றில் விண்ணப்பித்து பெற்றுக்
கொள்ளலாம்.ஒரு கிலோ
வேர்க்கடலை, 85.80 ரூபாய் ஆகும்.
இதில்,
40 சதவீதம் மானியமாக, 34.32 ரூபாய்
வழங்கப்படுகிறது. விவசாயிகள், 51.48 ரூபாய் வீதம்
வேர்க்கடலை பெற்றுக் கொள்ளலாம்.
ஒரு மூட்டை வேர்க்கடலையின் விலை, 1,544.40 ரூபாயாகும். இம்மாதம், 20ம் தேதி
முதல், விவசாயிகளுக்கு வேர்க்கடலை வினியோகம் செய்யப்படும்.