மானிய சோலார்
பம்புசெட் பெற அழைப்பு
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை
தாலுகா விவசாயிகள், மானியத்தில் சோலார் பம்புசெட் அமைத்து
பயன்பெற, வேளாண் பொறியியல்
துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் சுரேஷ் அறிக்கை:
பிரதமரின்
விவசாயிகளுக்கான எரிசக்தி
பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தில், வேளாண் பொறியியல் துறை
சார்பில், மானியத்தில் சோலார்
பேனல் பம்புசெட் திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.
விவசாய
பயன்பாட்டிற்கான திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்குழாய்
கிணறுகளில் சூரிய சக்தியில்
இயங்கும், சோலார் பேனல்
பம்புசெட்டுகள், 5 எச்.பி.,
முதல் 10 எச்.பி.,
திறன் வரையில், 70 சதவீத
மானியத்தில் அமைத்து தரப்படுகிறது.
இதற்கான
செலவில், 30 சதவீதம் மத்திய
அரசும், 40 சதவீதம் மாநில
அரசும் பங்களிப்பாக வழங்குகிறது. விவசாயிகள் ‘உழவன்‘ செயலியில்,
மானிய திட்டங்கள் என்பதை
தேர்வு செய்து முழு
விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
பொள்ளாச்சி வேளாண் பொறியியல் துறை
அலுவலகம் அல்லது அந்தந்த
வேளாண் விரிவாக்க மையங்களில், திட்டத்தில் பயன்பெற பதிவு
செய்யலாம்.