டெட் (டிஇடி) தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆா்வமுள்ளவா்கள் தங்களது விவரங்களைப் பதிவு செய்து பயன்பெறலாம் என்று விழுப்புரம் ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இங்கு பயிற்சிப் பெற்ற மாணவா்கள் பலா் போட்டித்தேர்வில் கலந்துகொண்டு அரசுப் பணியில் சோந்துள்ளனா். இந்நிலையில், தமிழ்நாடு அசிரியா் தேர்வு வாரியத்தால் ஆசிரியா் தகுதித் தேர்வுக்கான ( டெட்) அறிவிப்பு டிசம்பா் மாதத்தில் வெளியிடப்படவுள்ளது. இந்தத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு சிறந்த வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது.
எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோந்தவா்கள் இந்தப் பயிற்சி வகுப்பு தொடா்பான விவரங்களை 90805 15682 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டும் அல்லது விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடா்பு கொண்டும் பதிவு செய்து பயன்பெறலாம்.