நீட் தேர்வில்
புதிய மாற்றம்
இரண்டு
ஆண்டுகளுக்கு பிறகு
மருத்துவ படிப்பிற்கான மாணவர்களை
தேர்வு செய்யும் நீட்
தேர்வு வரும் ஜூலை
17ஆம் தேதி நடைபெற
இருக்கிறது. கடந்த ஏப்ரல்
6-ஆம் தேதி முதல்
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப முறை
தொடங்கப்பட்டது. இதுவரை
20 லட்சம் மாணவ–மாணவிகள்
நீட் தேர்விற்கு விண்ணப்பித்து உள்ளனர்.
நீட்
தேர்வு எழுதுவதற்கு அதிகபட்ச
வயது வரம்பு பொதுப்
பிரிவினருக்கு 25 ஆகவும்,
இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 30 ஆகவும் இருந்தது. ஆனால்,
தற்போது நீட் தேர்வுக்கு வயது வரம்பு தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் எக்கச்சக்கமானோர் நீட் தேர்விற்கு விண்ணப்பித்து உள்ளனர்.
மேலும்
இந்த ஆண்டு நீட்
தேர்வில் தேர்வர்களுக்கு கேள்விகளில் சாய்ஸ் வழங்கப்படும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா
காலகட்டத்தின் காரணமாக
பல பள்ளிகளில் பாடத்
திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால்
இத்தகைய வாய்ப்பு வழங்கப்படுகிறது என கூறப்படுகிறது. அதாவது
ஒவ்வொரு பிரிவிலும் எப்போதும்
45 கேள்விகள் இடம்பெறும். ஆனால்,
இந்த ஆண்டு விலங்கியல், தாவரவியல், வேதியியல் மற்றும்
இயற்பியல் பாடங்களில் இருந்து
50 கேள்விகள் கேட்கப்படும்.
இந்த
கேள்விகளில் இருந்து 45 கேள்விகளுக்கு பதிலலித்தால் மட்டும்
போதுமானது. ஐந்து கேள்விகளை
தவிர்த்து கொள்ள வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது. மேலும்
நீட் யுஜி தேர்வை
முடிக்க விண்ணப்பதாரர்களுக்கு கூடுதலாக
20 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது. 180 கேள்விகளுக்கு விடையளிக்க 20 நிமிடங்கள் கூடுதலாக
வழங்கப்பட்டு 3 மணி
நேரம் 20 நிமிடங்கள் தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
கடந்த ஆண்டு நீட்
தேர்வு 202 நகரங்களில் மட்டுமே
நடத்தப்பட்ட நிலையில் இந்த
ஆண்டு மொத்தம் 543 நகரங்களில் நடைபெற இருக்கிறது.