மாற்றுத் திறனாளிகளுக்கு குரூப் 4 தேர்வு பயிற்சி
மாற்றுத்
திறனாளிகள் குரூப் 4 தேர்வு
எழுதுவதற்கான பயிற்சி
வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்
சார்பில் இந்த பயிற்சி
வகுப்புகளுக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அந்தத் துறை வெளியிட்ட செய்தி:
குரூப்
4 தேர்வு எழுதவுள்ள மாற்றுத்
திறனாளி மாணவா்களுக்காக நேரடி
மற்றும் இணையவழி பயிற்சி
வகுப்புகள் வரும் 20ம்
தேதி முதல் நடைபெறவுள்ளன.
கூடுதல்
தகவல்களுக்கு 9361566648
என்ற கைப்பேசி எண்ணைத்
தொடா்பு கொள்ளலாம்.
மேலும்,
மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஏ-28, முதல்
தளம், டான்சி கட்டடம்,
திரு.வி.க
தொழில்பேட்டை, கிண்டி,
சென்னை -32 என்ற அலுவலக
முகவரியை அணுகலாம் என்று
வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.