தூய்மைப் பணியாளா்
காலிப் பணியிடம்
தேனி
மாவட்டத்தில் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நலத்
துறை சார்பில் செயல்பட்டு வரும் அரசு கல்வி
விடுதியில் காலியாக உள்ள
தொகுப்பூதிய அடிப்படையிலான தூய்மை
பணியாளா் பணிக்குத் தகுதியுள்ளவா்கள் மே 30ம்
தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
அரசு
கல்வி விடுதியில் மாதம்
ரூ. 3,000 தொகுப்பூதிய அடிப்படையிலான பகுதி நேர தூய்மைப்
பணியாளா் பணியிடம் (ஆண்கள்
மட்டும்) இனச் சுழற்சி
அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
இந்தப்
பணிக்கு தமிழில் எழுத,
படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
2022, ஜூலை 1 ஆம் தேதியன்று
ஆதி திராவிடா் மற்றும்
பழங்குடியினா் 18 முதல்
37 வயதுக்கும், பிற்பட்டோர், மிகவும்
பிற்பட்டோர், பிற்பட்ட வகுப்பு
முஸ்லிம், டி.என்.சி.,
வகுப்பினா் 18 முதல் 34 வயதுக்கும், இதர வகுப்பினா் 18 முதல்
32 வயதுக்கும் உள்பட்டு இருக்க
வேண்டும்.
தகுதியுள்ளவா்கள் உரிய சான்றிதழ்கள், மார்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தேனி மாவட்ட ஆட்சியா்
அலுவலக வளாகத்தில் உள்ள
பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் மே
30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.