போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் கல்வித்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பு
போட்டித்
தேர்வுகளுக்கான பயிற்சி
வகுப்புகள் கல்வித் தொலைக்காட்சியில் தினமும் இரவு
7 மணி முதல் 9 மணி
வரை ஒளிபரப்பு செய்யப்படும் என்றும், இதனை போட்டித்
தேர்வுகளுக்கு தயாராகும்
போட்டியாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும்
வேலூா் மாவட்ட ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய
அரசால் நடத்தப்படும் குடிமைப்பணி தேர்வுகள், இந்திய பொறியியல்
பணித்தேர்வுகள், தமிழ்நாடு
அரசுப்பணியாளா் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகள்,
தமிழ்நாடு சீருடைப் பணியாளா்
தேர்வுகள், மத்திய அரசால்
நடத்தப்படும் தேர்வுகள்,
வங்கித் தேர்வுகள், ரயில்வே
வாரியம் நடத்தும் தேர்வுகள்
என பல்வேறு போட்டித்
தேர்வுகளுக்கான பாடங்கள்
சிறந்த வல்லுநா்களைக் கொண்டு
எடுக்கப்பட்டு வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை சார்பில்
தமிழ்நாடு அரசு கேபிள்
டிவி நிறுவனம் மூலம்
கல்வித் தொலைக்காட்சி சேனலில்
ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
கிராமப்புறத்திலிருந்து நகரத்துக்கு வந்து
பயிற்சி வகுப்புகளில் கலந்து
கொள்ள இயலாத நிலையில்
உள்ளவா்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டே அரசுப்
பணிக்கு தயார் படுத்திக்
கொள்ளும் இளைஞா்கள் தாங்கள்
இருக்கும் இடத்திலிருந்தபடி தங்களை
தயார் செய்துகொள்ள இது
ஒருநல்ல வாய்ப்பாகும்.
இதில்,
போட்டித் தேர்வுக்களுக்கான பாடக்குறிப்புகள், ஊக்க உரைகள்,
முந்தைய ஆண்டுகளின் வினாத்
தாள்கள் குறித்த கலந்துரையாடல், நடப்பு நிகழ்வுகள் ஆகிய
பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும்
இரவு 7 மணியிலிருந்து 9 மணி
வரையு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எனவே போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் போட்டியாளா்கள் இதனைப்
பயன்படுத்திக் கொள்ள
வேண்டும்.