சமையல் சிலிண்டருக்கு மானியத் தொகை வருகிறதா? என்பதை எப்படி தெரிந்து
கொள்ளலாம்
வீட்டு
உபயோக சமையல் சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும்
அதிகரித்துக் கொண்டே
செல்கிறது. 1,000 ரூபாய்க்கு மேல்
சிலிண்டர் விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் சிரமத்தில் உள்ளனர்.
மற்றொரு புறம் சிலிண்டருக்கான மானியம் சரிவர கிடைப்பதில்லை என்று பலர் புகார்
கூறிவருகின்றனர். சிலிண்டர்
மானியத்தை அரசு நிறுத்திவிட்டதாகவும் வதந்தி பரவிவருகிறது. சிலிண்டர் மானியம் வங்கிக்
கணக்கில் டெபாசிட் செய்ததற்கான SMS வாடிக்கையாளர்களுக்கு அரசு
தரப்பில் இருந்து அனுப்பப்படுகிறது. ஆனாலும் பலருக்கு
SMS வருவதில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல, சிலிண்டர் மானியம்
வருவதைக் கண்டுபிடிக்க mylpg இணையதளம்
உள்ளது. ஆனால், இதில்
நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக
வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர்.
ஹெச்.பி.
கேஸ் சிலிண்டர் டெலிவரி
மேன்களிடம் vitran என்ற மொபைல்
ஆப் உள்ளது. அவர்கள்
வேலை செய்யும் சிலிண்டர்
ஏஜென்சியுடன் அது
இணைக்கப்பட்டிருக்கும். அந்த
ஆப் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களது மானியம்
குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் நேரடியாக
அந்த ஆப்பில் சென்று
பார்க்க முடியாது. ஆனால்,
டெலிவரி மேனிடம் கேட்டு
கடந்த ஒரு வருடத்துக்கான மானியத் தொகை குறித்து
முழு விவரத்தையும் தெரிந்து
கொள்ளலாம்.