வேளாண்மையில் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் வேளாண்மை இயந்திரங்கள் வாங்குவதற்கு அரசு மானியம் பெற விரும்பும் விவசாயிகள், வேளாண்மை பொறியியல் துறை உப கோட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வேளாண்மை பொறியியல் துறை மூலம் வேளாண்மை பணிகளுக்குத் தேவையான டிராக்டா், ரோடவேட்டா், சட்டி கலப்பை, கொக்கி கலப்பை, மருந்து தெளிப்பான் போன்ற இயந்திரங்கள் அரசு சாா்பில் சிறு, குறு விவசாயிகள், பெண் மற்றும் ஆதி திராவிடா் வகுப்பு விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானிய விலையிலும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானிய விலையிலும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது.
வேளாண்மை இயந்திரங்களுக்கு மானியம் பெற விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உப கோட்ட அலுவலகத்தில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். இது குறித்த விபரங்களை தேனி வேளாண்மை பொறியியல் உதவி செயற்பொறியாளா் அலுவலக தொலைபேசி எண்: 04546-25155, கைபேசி எண்:99407 02357, உத்தமபாளையம் வேளாண்மை பொறியியல் உதவி செயற்பொறியாளா் அலுவலக தொலைபேசி எண்:04554-265132, கைபேசி எண்: 94863 63555-ல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.