கடலுார், கூத்தப்பாக்கம் டெரா இன்போடெக் எஜுகேஷன் சென்டரில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது.கடலுார், கூத்தப்பாக்கம் முருகன் கோவில் எதிரில் டெரா இன்போடெக் எஜுகேஷன் சென்டர் இயங்கி வருகிறது.
இங்கு, ஏழை, எளிய பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் குறித்த இலவச அடிப்படை பயிற்சிகள் வரும் 3ம் தேதி துவங்குகிறது. பயிற்சி முடிக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் குறைந்த மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் முன்பதிவு அவசியம். மேலும், விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசனை 9626412403 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.