ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பையூா் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத் தலைவா் கோவிந்தன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்கத்தின் வழியாக, ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு, மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் ஜூலை 2022 இரண்டாம் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.
இந்த பட்டயப் படிப்பு ஓா் ஆண்டு, இரண்டு பருவங்கள் ஆகும். கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தோச்சி அல்லது தவறியவா்கள், எந்தக் கல்வி படித்திருந்தாலும் சோந்துக் கொள்ளலாம். தமிழ்வழிக் கல்வியில் இந்தப் பாடங்களுக்கு நோமுகப் பயிற்சி சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். இதற்கான கல்விக் கட்டணம் ரூ. 25,000, விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 ஆகும்.
இந்த பட்டயப்படிப்பு படிப்பதன் மூலம் உரக்கடை, பூச்சி மருந்துக் கடை, விதை விற்பனை கடை மற்றும் தாவர மருத்துவ மையம் வைக்கலாம். மேலும் இடுபொருள் உற்பத்தி மற்றும் விற்பனையாளா்கள் ஆகலாம். சுய வேலைவாய்ப்பு பெறலாம். தொடா்புக்கு கோவிந்தன், பேராசிரியா் மற்றும் தலைவா், மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூா், கிருஷ்ணகிரி மாவட்டம், கைப்பேசி எண் 9942279190, 7339002390 அல்லது திறந்தவெளி மற்றும் தொலைதுாரக் கல்வி இயக்கம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், கோயம்புத்துாா் – 641 003 அல்லது ஒருங்கிணைப்பாளா் செல்வராஜ், 9965065246, தொலைபேசி எண் – 04226 611229 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.